463. நகைச்சுவை வித்தகர் சோ - காபி வித் அனு
நேற்றிரவு விஜய் டிவி ஒளிபரப்பிய 'காபி வித் அனு' நிகழ்ச்சியில் சோ அவர்களும், மௌலி அவர்களும் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கினார்கள். எதிர்பார்த்தது போல, டோ ண்டு சார் இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு நீண்ட பதிவு போட்டு தனது 'சோ அபிமானத்தை' மற்றொரு முறை நிரூபித்து விட்டார் ;-) எனவே நான் ஒரு மினி அலசலோடு நிறுத்திக் கொள்கிறேன்!
சோ அவர்களுக்கு satirical / subtle வகை நகைச்சுவை இயல்பாக அமைந்துள்ள ஒரு சங்கதி. அதனால், பார்ப்பவரை அவரால் எளிதில் கட்டிப்போட்டு விட முடிகிறது, அவரைப் பிடிக்காதவர்களைக் கூட :) அவர் பேசியதிலிருந்து சில துளிகள்:
1. யாரோ ஒருவர் சோவை, அவர் வாக்கிங் போகிறாரா என்றதற்கு, அவருக்கே உரித்தான பாணியில், "இல்லை டாக்கிங் மட்டும் தான் போய்க் கொண்டிருக்கிறது" என்றாராம்!
2. அவரது நண்பர் ரங்கா என்பவர் அவரை வற்புறுத்தி ஒரு முறை காலை வாக்கிங்குக்கு அழைத்துச் சென்றாராம். கொஞ்சம் நடந்தவுடனேயே, சோவுக்கு போரடித்து விட்டது. அச்சமயம், அவ்வழியில் நாய் ஒன்று (அவர்களுக்கு முன்னால்) கொஞ்ச தூரம் ஓடிச் சென்று மீண்டும் திரும்பி வந்ததை சோ ரங்காவிடம் காண்பித்து, "ரங்கா, இந்த நாய்க்கும் நமக்கும் இப்ப ஒரு வித்தியாசமும் இல்ல!" என்று சொல்ல அப்செட் ஆன ரங்கா மறந்து கூட சோவை வாக்கிங்குக்கு அழைப்பதில்லையாம் ...
3. அது போலவே, ஒழுங்காக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவரிடம் சோ அவர்கள், நல்ல உடற்கட்டு கொண்டவர்கள் ஒரு போது சாதனையாளர்களாக இருந்ததில்லை என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டு அதோடு, 'ஒரு மனிதனுக்கு ஒன்று கட்டான உடலமைப்பு இருக்க முடியும் அல்லது அறிவாற்றல் இருக்க முடியும், இரண்டும் சேர்ந்து அமைய வாய்ப்பே கிடையாது' என்று சோ நண்பரை மேலும் குழப்பி விட நண்பர் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டாராம் :)
4. நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளை ஒன்றுக்கு முன்னால் அனு, சோ மற்றும் மௌலியிடம், "நீங்க ரெண்டு பேரும் நான் சொல்ற டாபிக்ல பேசணும், இப்ப ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்" என்றவுடன் சோ, "நீங்க சொல்ற டாபிக்ல பேசணும், நீங்க சொல்றபோது பிரேக், எல்லாம் ஒரே பொம்பளை ராஜ்ஜியமா இருக்கு!" என்று அனுவை ஒரு போடு போட்டது அருமை :)
5. சோ மௌலியையும் விட்டு வைக்கவில்லை! மௌலி தான் நாடகம் எழுத வந்ததற்கு சோ தான் இன்ஸ்லிரேஷன் என்றும், சோவைப் பார்த்து தான் தனக்கு தன்னம்பிக்கை வந்தது என்றும் கூறியபோது இடைமறித்த சோ, 'இவனே (சோ) நாடகம் போடும்போது தன்னால் முடியாதா என்ன என்பதைத் தான் மௌலி மிகவும் பாலிஷாகக் கூறுவதாக' மௌலியை வாரியது ரசிக்கத் தக்கது!
6. அது போலவே, சோ கடந்த 25 வருடங்களாக 'அதே மாதிரி' இருப்பதை மௌலி ஒரு பாராட்டாகக் கூற, சோ அனுவிடம், "கடந்த 25 வருடங்களாக என்னிடம் எந்த improvement-ம் இல்லை என்பதை மௌலி எத்தனை நாசூக்காகச் சொல்கிறார், பாருங்கள்" என்று கூறி ஒரு ஸிக்ஸர் அடித்தார் :)
7. மௌலி, விசு, கே.பி ஆகிய மூவரும் நாடக உலகிலிருந்து சினிமாவுக்குச் சென்று, வெகு விரைவாகவும் எளிதாகவும் அதன் நுணுக்கங்களையும், நெளிவு சுளிவுகளையும் கற்றுத் தேர்ந்து விட்டதையும், தான் அவர்கள் போல வெற்றி பெற இயலவில்லை என்றும் நினைவு கூர்ந்தார்.
8. திருப்பி வைக்கப்பட்ட (பிரபலங்களின்) புகைப்படங்களில் மூன்றைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பற்றி (கா.வி.அ) நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர் பேச வேண்டிய பகுதி உள்ளது. சோ முதலில் ஜெய்சங்கரின் போட்டோவை எடுத்தார். தனது சிறந்த நண்பர், பரோபகாரி, பல தயாரிப்பாளர்களை உருவாக்கியவர், An actor by his own right என்றும் ஜெய்யை மிகவும் சிலாகித்துப் பேசினார்.
அடுத்து சோ எடுத்தது, ஜெயலலிதாவின் போட்டோவை! எடுத்தவுடன், "நமக்குன்னு வருது பாருங்க!" என்று தமாஷ் பண்ணிவிட்டு, தான் அவரை பலமுறை விமர்சித்திருப்பதை சுட்டிக் காட்டி விட்டு, இந்தியாவில் உள்ள பெண் அரசியல்வாதிகளிலேயே திறமையானவர் ஜெயலலிதா என்றும், ஜெவின் courage, confidence, knowledge, administrative abilities ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அவர் அரசியலில் இன்னும் உயரத்துக்கு செல்ல முடியும் என்றார் !
அடுத்து ஆச்சி மனோரமாவை மிகவும் பாராட்டிப் பேசினார். மனோரமா அன்றிலிருந்து இன்று வரை திரையுலகில் பிரகாசிப்பதைச் சுட்டிக் காட்டி, நடிப்புக்கு ஆண்களில் சிவாஜி என்றால், பெண்களில் மனோரமாவாகத் தான் இருக்க முடியும் என்றார் சோ. நாகேஷின் திறமையையும் மனம் திறந்து பாராட்டினார். அது போல, டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பிறகு, சாதாரண தோற்றமுடைய ஒருவர், காமெடி ஹீரோவாக வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தவர் பாண்டியராஜனே என்று அவரையும் பாராட்டினார்.
9. கலைஞர் பற்றிக் கேட்டபோது, மிகச் சாதாரண நிலைமையிலிருந்து இத்தனை உயரத்தை அவர் அடைந்ததற்கு அவரது கடுமையான உழைப்பும், சாமர்த்தியமும் காரணங்கள் என்றார். அது போல, ரஜினி பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசாவிட்டாலும், ஒவ்வொரு விஷயம் பற்றியும் ரஜினிக்கென்று ஒரு தெளிவான கருத்துள்ளதாகவும் சோ குறிப்பிட்டது சற்று ஆச்சரியத்தை வரவழைத்தது ! "ரஜினி வேண்டுமா, கமல் வேண்டுமா?" என்ற கேள்விக்கு, தான் யாருக்கும் வெறிபிடித்த ரசிகன் இல்லை என்பதால் தனக்கு இருவருமே வேண்டும் என்று அரசியல்வாதி ஸ்டைலில் சோ எஸ்கேப் :)
10. நிகழ்ச்சிக்கு சோ தந்த Finishing Touch மறக்க முடியாதது ! அனு சோவிடம், "இந்த நிகழ்ச்சியின் காபி அவார்டை யாருக்கு, எதற்காகக் கொடுப்பீர்கள்?" என்று வினவியதற்கு சோ, எதையும் குடும்பத்தினருக்கே தர வேண்டும் என்ற தற்போதைய தமிழக நடைமுறையின்படி தான் நடக்க விரும்புவதால், அந்த அவார்டை தனது பேத்திக்கே அளிக்க விருப்பமென்றும், "ஊரோடு ஒத்து வாழ வேண்டும்" என்பதும் அதற்குக் காரணம் என்றும் சொல்லி, ஜெயசூர்யா ஸ்டைலில் பாயிண்ட் பவுண்டரி மேல் ஸிக்ஸர் அடித்தபோது, அனுவும் மௌலியும் சிரிப்பை அடக்க சற்று சிரமப்பட்டதென்னவோ நிஜம் :)
சோ அத்தோடு விட்டாரா! தன் 9 வயது பேத்தி நன்றாக 'கவிதை' எழுதுகிறாள், ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறாள் என்று கங்குலி ஸ்டைலில் டைமிங்காக ஒரு ஷாட் அடித்தது சூப்பர் !
இது போல ஒரு 'காபி வித் அனு' நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. Yesterday, it was a real one man show !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
14 மறுமொழிகள்:
Test :)
த பர்ஸ்ட்
மீ த பர்ஸ்ட்
:-)
naanum parthen and loved the show!
did anyone upload this in youtube?
///நாய்க்கும் நமக்கும் இப்ப ஒரு வித்தியாசமும் இல்ல!"///
இதைக் கஷ்டப்பட்டுக் கொண்டு வாக்கிங் போய் கண்டு பிடித்தாரா.தமிழில் சில வலைப் பதிவுகளை வாசித்தாலே தெரிந்திருக்குமே :)
கி அ அ அனானி
//did anyone upload this in youtube?//
ஆறு பகுதிகளாக வந்துள்ளன. பார்க்க:
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்
அன்புடன்,
டோண்டு ராகவன்
நம்ம டென்டுல்கர் சார் (:-))வீடியோ கொடுத்திருக்கார்,இனிமேல் தான் பார்க்கனும்.
பேத்தி விஷயம் தான் சூப்பர்
விலெகா, சரவணகுமரன், blogeswari, வெத்துவேட்டு, கி.அ.அ.அ, டோ ண்டு சார், வ.குமார்,
வரவுக்கும் வாசிப்புக்கும் நன்றி.
எ.அ.பாலா
//
///நாய்க்கும் நமக்கும் இப்ப ஒரு வித்தியாசமும் இல்ல!"///
இதைக் கஷ்டப்பட்டுக் கொண்டு வாக்கிங் போய் கண்டு பிடித்தாரா.தமிழில் சில வலைப் பதிவுகளை வாசித்தாலே தெரிந்திருக்குமே :)
கி அ அ அனானி
//
பயங்கர கொழுப்புய்யா ஒமக்கு ;)
அருமையாக எழுதி இருக்கிறீர்கள் பாலா. நான் தவறவிட்டதை இங்கே பிடித்துவிட்ட உணர்வு,
வாழ்க தமிழுடன்,
நிலவன்
http://eerththathil.blogspot.com
நிலவன்,
மிக்க நன்றி தங்கள் வாசிப்புக்கும், பாராட்டுக்கும்.
//10. நிகழ்ச்சிக்கு சோ தந்த Finishing Touch மறக்க முடியாதது ! அனு சோவிடம், "இந்த நிகழ்ச்சியின் காபி அவார்டை யாருக்கு, எதற்காகக் கொடுப்பீர்கள்?" என்று வினவியதற்கு சோ, எதையும் குடும்பத்தினருக்கே தர வேண்டும் என்ற தற்போதைய தமிழக நடைமுறையின்படி தான் நடக்க விரும்புவதால், அந்த அவார்டை தனது பேத்திக்கே அளிக்க விருப்பமென்றும், "ஊரோடு ஒத்து வாழ வேண்டும்" என்பதும் அதற்குக் காரணம் என்றும் சொல்லி, ஜெயசூர்யா ஸ்டைலில் பாயிண்ட் பவுண்டரி மேல் ஸிக்ஸர் அடித்தபோது, அனுவும் மௌலியும் சிரிப்பை அடக்க சற்று சிரமப்பட்டதென்னவோ நிஜம் :)//
அட்டகாசமான அவதானிப்பு போங்கள்!
தனது பேத்திக்கு அவ்விருதை கொடுக்க மனம் விரும்பினால் அதை நேரடியாகவே சொல்லி நேர்மையாக கொடுத்துவிட்டிருக்கலாமே?
எதற்கு இப்படி ஒரு அருவருப்பான சப்பைகட்டு? அப்படியென்றால் தானும் அந்த குட்டையில் ஊறியவர்தான் என்கிறாரா? எனில், மற்றவர்களை விமர்சிக்க அருகதை இருக்கிறதா?
எதை விமர்சிக்கிறோமோ அதை தானே செய்யும் போது இப்படி காமெடி ஆக்கிவிட்டால், புரிந்தோ/புரியாமலோ புகழ்ந்து தள்ளும் 'நேயர்'கள் இருக்கும்போது நேர்மையைப்பற்றி யாருக்கு கவலையிங்கே?
Post a Comment